அசிடிட்டியா? அப்ப நீங்க சாப்பிட வேண்டியது இதுதாங்க!

அசிடிட்டியா? அப்ப நீங்க சாப்பிட வேண்டியது இதுதாங்க!

அசிடிட்டி இந்த வார்த்தை தாங்க இப்போ பெரும்பாலும் நாம கேட்குற வார்த்தை. அசிடிட்டி அப்படினா என்ன அது என்ன பண்ணும்னு முதல்ல பாக்கலாம். நம்ம வயிற்றில் சுரக்கிற அமிலமானது உணவு குழாய் வழியாக மேலே வருவததான் அசிடிட்டினு சொல்றோம். இதனால நெஞ்செரிச்சல் வயிறு எரிச்சல் ஏற்படும்.இந்த பிரச்சனைய நாம சரியான உணவு பழக்கவழக்கதினால சரி செய்யமுடியும் அப்படினு மருத்துவ நிபுணர்கள் சொல்றாங்க.

சில நேரத்தில் நாம கோவமோ இல்ல உணர்ச்சிவச படும்போதும் அசிடிட்டி வரலாம்.அந்த நேரத்தில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் அந்த சூழ்நிலையை சமாளிக்க இரத்தத்தின் மூலமாக ஆற்றல் தசைகளுக்கு அனுப்பபடுகிறது.இதனால் செரிமான வேலை செய்யும் உறுப்புகளுக்கு சரியான அளவில் இரத்தம் செல்வதில்லை. இதனால் செரிமானம் குறைந்து வயிற்றில் நீண்ட நேரம் உணவு தங்கிவிடுவதால் சுரக்கும் அமிலமானது மேலே வருகிறது.

இதனால் மன அழுத்தத்தை சமாளிக்க உடற்பயிற்ச்சியோ அல்லது இதமான இசையை கேட்கலாம்.இதன் மூலமும் அசிடிட்டி குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

  • பப்பாளி மற்றும் அன்னாசி – பப்பாளி மற்றும் அன்னாசி பழத்தில் பப்பாயின் மற்றும் புரொமிலயின் போன்ற என்சைம்கள் அதிக அளவில் உள்ளது. இவை செரிமான உறுப்புகளுக்கு புத்துணர்வூட்டி நல்ல் செரிமானத்திற்க்கு வழிவகுக்கும்.
  • முட்டைகோஸ் – இதில் குளுட்டோமின் என்னும் அமினொ அமிலம் அதிக அளவில் உள்ளது.இது செரிமான பாதைக்கு மிகவும் நல்லது. இதனால் நெஞ்செரிச்சல் கட்டுக்குள் வரும். முட்டைகோஸ் சாற்றை தனியாக உண்ண முடியாவிட்டால் மற்ற பழங்களுடன் சேர்த்து உண்ணலாம்.
  • சீரகம், புதினா, சோம்பு- இவற்றிற்க்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு.இதனால் இவற்றை தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
  • முட்டையில் உள்ள வெள்ளைக்கரு – இதற்கு அசிடிட்டி பிரச்சனையை தீர்க்கும் ஆற்றல் உண்டு.இதேபோல் மீன், கோழி அதிக காரம் இல்லாமல் சமைத்து உண்ணலாம்.
  • கொழுப்பு குறைவாக உள்ள சீஸ் – குறைந்த கொழுப்பு உள்ள சீஸ்களுக்கு அசிடிட்டி போக்கும் தன்மையுண்டு. இதெபோல் குறைந்த கொழுப்புள்ள பாலும் அசிடிட்டிக்கு ஏற்றது.மேலும் இதனை போக்க நவதானியங்களையும் உண்ணலாம்
  • இஞ்சி டீ – இதனை சாப்பிடுவதற்க்கு அரை மணி நேரத்திற்க்கு முன்னர் குடிக்கவேண்டும்.இது செரிமானதிற்க்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.

 

Share this story