புரதச் சத்து நமது உடலில் செய்யும் பணிகள் இவைகள்தான்!!

உலக வியாதியான தலை முடி உதிர்வில் துவங்கி, நமது நம் உடலின் வளர்ச்சிவரை அனைத்திலும் மிக முக்கிய பங்கு வகிப்பது புரதச் சத்துகள் தான். ஆனால் நாம் பொதுவாக புரதச் சத்து உணவுகளை போதுமான அளவு எடுத்துக் கொள்வதில்லை. அதனால்தான் நம்மில் பலர் முடி உதிர்வு, இளம் வயதிலேயே முதுமைத் தோற்றம் போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
அதேபோல் உடல் எடையினைக் குறைக்க நினைப்போரும், மொத்தமாக சாப்பாடு சாப்பிடுவதை நிறுத்தாமல் அதற்கு மாற்றாக புரதச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் டயட் இருப்பவர்களுக்கு புரதச் சத்து உணவுகளும், பழங்களுமே பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் இது தசையின் வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் போன்றவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சிலரோ மிதமிஞ்சிய அளவு புரதத்தினை எடுத்துக் கொள்ளவும் செய்கின்றனர். மிக அதிக அளவு புரதச் சத்து அதிக அளவு பயனைத் தரும் என்பதும் தவறான ஒன்றாகும்.
அதனால் தினசரி உணவில் தேவையான அளவு புரதத்தினை எடுத்துக் கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தேவைக்கு குறைவாக உட்கொள்ளும் போது புரதச் சத்து குறைபாட்டினால் வரும் தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகளையும் கட்டுப்படுத்த முடியாது.