சளியை போக்க உதவும் ஓர் அற்புத மருந்து !

சளி தொல்லை ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உதவும் மருத்துவ குணம் கொண்ட வெள்ளை பூண்டை பற்றி தான் பார்க்க போகிறோம். சளி அதிகம் பாதிக்கும் சுவாச உறுப்புகள் மற்றும் தொண்டை பகுதிகள் போன்றவை தான்.
பூண்டில் இருக்கும் சத்துக்கள் :
அன்டி பயாடிக்
ஆன்டி ஆக்ஸிடென்ட்
மேற்கூறியவை சளி தொல்லைகளுக்கும் மற்றும் அதனால் ஏற்படும் காய்ச்சல், தலை வலி, இருமல், தொண்டை எரிச்சல், அலற்சிகள், மூச்சு திணறல், மூச்சை உள் இழுத்து வெளி விடுவது சிரமம் போன்றவைகளுக்கு அருப்புத மருந்தாக கருத படுகிறது.
பூண்டுடன் வெங்காயத்தை சேர்த்து கொள்ளுங்கள் :
வெங்காயத்தில் இருக்கும் சத்துக்கள் அதிக மருத்துவ குணம் கொண்டவையே. இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற மிகவும் உறுதுணையாக இருக்கும், அதிகமான சளி தொல்லையால் அவதி படுவோர் வெங்காயத்தை பயன்படுத்த சளிகள் அனைத்தையும் வெளியேற்ற உதவும்.
சளியால் உடலில் இருக்கும் நச்சு தன்மைகளை போக்க வெள்ளை பூண்டு மற்றும் வெங்காயத்தை உரித்து வைத்து கொள்ளுங்கள், அதனை நீரில் நன்கு கழுவிய பின்னர் மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் சாற்றினை மட்டும் தினம் அருந்த உடலில் எவ்வித நச்சு தன்மையும் கலக்காது. சளியால் ஏற்படும் நெஞ்சு வலி, தொண்டை வலிகள் தீர்ந்து சளியை குறைக்கும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :
வெங்காயம் மற்றும் பூண்டில் இருக்கும் வைட்டமின்கள், மினரல்கள் உடலில் இருக்கும் நச்சு கிருமிகளை வெளியேற்ற உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பு திறனை கொடுத்து நம்மை பாதுகாக்கிறது.
உடலில் பாடீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் தொற்றுகளால் நோய்களை எதிர்த்து போராட உதவும் சல்பர் காம்பவுண்டுகள் சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக் போன்றவை வெங்காயத்தில் இருப்பதால் உடனே பலனை தரும்.