Tamil Wealth

அழகை கொடுக்க உதவும் புளி ? ட்ரை பண்ணலாமே!

அழகை கொடுக்க உதவும் புளி ? ட்ரை பண்ணலாமே!

சமையலின் ருசிக்கு பயன்படும் புளியை சருமத்தில் ஏற்படும் குறைக்கும் பயன்படுத்தலாம், நல்ல சிவப்பழகை கொடுக்கவும் உதவும் முறைகளை பற்றி பார்க்கலாம்.

கண்கள் :

கண்களில் ஏற்படும் கருவளையத்தை போக்க புளியை பயன்படுத்தும் முறை :

செய்முறை :

ஒரு கப் தண்ணீரில் சுத்தமான புளியை கரைத்து கொள்ளுங்கள், அதனை வடிகட்டி நீரினை தனியே எடுத்து கொள்ளுங்கள், அதனுடன் கஸ்தூரி மஞ்சளை கலந்து சேர்த்து குழைத்து பேஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். இதனை கண்களை சுற்றியும் மற்றும் கண்களிற்கு கீழ் நன்கு மசாஜ் செய்ய விரைவில் கருவளையம் மறையும் மற்றும் கண்களை பொலிவாக வைத்து கொள்ளும்.

முக வறட்சி :

முகத்தில் ஏற்படும் வறட்சியை போக்க புளி கரைசலை எடுத்து கொள்ளுங்கள், கோடைகாலங்களில் ஏற்படும் சூட்டினால் ஏற்படும் வறட்சிக்கு சருமத்தில் பயன்படுத்த நல்லது. சருமத்தை பராமரிக்கும் ஆற்றல் கொண்டது.

சருமத்தை பராமரிக்கும் :

சருமத்தில் இருக்கும் கருமை நிறத்தை மாற்றவும் மற்றும் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாகவும் தன்மை கொண்டது.

செய்முறை :

புளியின் கரைசலை எடுத்து கொள்ளுங்கள், அதனுடன் பால் கலந்து கொள்ளுங்கள், இதனை சருமத்திற்கு தினம் பயன்படுத்த முகம் நல்ல பொலிவை கொடுக்கும். இதனுடன் கஸ்தூரி மஞ்சள் அல்லது கடலை மாவை கலந்து பேஸ்ட் செய்து தினம் உபயோகிக்க, 1 அல்லது அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். செய்து பாருங்கள் பயனை பெறுங்கள்.

எளிய முறை புளியை பயன்படுத்துவது :

எல்லோர் வீட்டிலும் இருக்கும் புளியை நீரை நன்கு ஊற வைத்து, ஊறிய பின்னர் நீரினை வடிகட்டி அதனை மட்டுமே தினம் சருமத்திற்கு பயன்படுத்தலாம், இதுவே மிகவும் எளிய முறையாக இருக்கும்.

 

Share this story