Tamil Wealth

பிரசவித்த பெண்களுக்கான 8 வடிவ நடைப்பயிற்சி!!

பிரசவித்த பெண்களுக்கான 8 வடிவ நடைப்பயிற்சி!!

நடைபயிற்சிகளில் தற்போது பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக தற்போது 8 வடிவ நடைபயிற்சிதான். ஆமாங்க, இந்த 8 வடிவ நடைப்பயிற்சியினை செய்தால் உடல் எடை குறைகிறதுமாக சொல்லவும்படுகிறது.

அப்படி என்னதான் சிறப்பு இந்த 8 வடிவ நடைப்பயிற்சியில் என்றுதான் இப்போது பார்க்கப்போகிறோம். அனைத்திலும் முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் நிகழ சாதாரண நடைப்பயிற்சியோடு 5 முதல் 10 சுற்றுகள் 8 வடிவ நடைப்பயிற்சி செய்யலாம். ஆனால் அதைத்தாண்டி அதிக சுற்றுகள் சுற்ற நினைப்போர், கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

ஆனால் பிரசவத்திற்குப் பின்னர் உடல் எடை குறைக்க நினைப்போருக்கான சிறந்த தீர்வாக இந்தப் பயிற்சி இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பிரசவித்த பெண்கள் 2 மாதங்களைக் கடந்த பின்னர் தினமும் 1 மணி நேரம் மேற்கொள்ள வேண்டும்.

அதிலும் காலை 5 மணி முதல் 6 மணி வரை அல்லது மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை செய்ய வேண்டும். நடைப்பயிற்சியின் துவக்க காலங்களில் மெதுவாகச் செய்தலே போதுமானது, ஒரு மாதம் கடந்த பின்னர் வேகத்தினைக் கூட்டிக் கொள்ளலாம்.

இது பிரசவித்த பெண்களின் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள சதையினை படிப்படியாக காணாமல் போகச் செய்யக்கூடியதாக உள்ளது.

Share this story