Tamil Wealth

சிவப்பழகினைத் தரும் கோதுமை மாவு ஃபேஸ்பேக்!!

சிவப்பழகினைத் தரும் கோதுமை மாவு ஃபேஸ்பேக்!!

சிவப்பழகு தரும் பலவகையான ஃபேஸ்பேக்குகளில், கோதுமை மாவு ஃபேஸ்பேக் சிறப்பான ரிசல்ட்டினைத் தரக் கூடியதாகும், அந்தவகையில் இப்போது கோதுமை மாவு ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

கோதுமை மாவு- 2 ஸ்பூன்,

பீட்ரூட் ஜூஸ்- 3 ஸ்பூன்,

மஞ்சள்- 1 ஸ்பூன்

தயிர்- கால் கப்

செய்முறை:

  1. கோதுமை மாவினை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  2. பீட்ரூட்டினை துருவி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து அந்த பேஸ்ட்டினை கோதுமை மாவு மற்றும் மஞ்சள் தூளினைக் கலந்து கொள்ளவும்.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து ஊறவிடவும்.  அதன்பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். சிவப்பழகு நிச்சயம் கிடைக்கும் என்பது உறுதி.

Share this story