Tamil Wealth

முடி அடர்த்திக்கு உதவச் செய்யும் சூப்பரான ஹேர்பேக் இதுதான்!!
 

முடி அடர்த்திக்கு உதவச் செய்யும் சூப்பரான ஹேர்பேக் இதுதான்!!

முடி அடர்த்தியினை அதிகரிக்கச் செய்வதில் தேங்காய் எண்ணெய்க்கு முக்கிய பங்கு உண்டு. அந்தவகையில் இப்போது நாம் தேங்காய்ப் பாலில் ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
தேங்காய்ப் பால்- ½ கப்
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
கறிவேப்பிலை- கைப்பிடியளவு

செய்முறை:
1.    கறிவேப்பிலையினை சிறிது சிறிது துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து அந்த கறிவேப்பிலையினை தேங்காய்ப் பாலுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்தால் சூப்பரான ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து ஊறவிடவும். இந்த ஹேர்பேக் முடியின் தன்மையினை மேம்படுத்துகின்றது. 
 

Share this story