பாதம் பளபளக்க சூப்பரான பேக் இதுதான்!!
Aug 28, 2020, 09:30 IST

பாதத்தினை பளபளப்பாக வைக்க நாம் எவ்வளவோ செலவுகள் செய்தாலும் பளிச்சென்று இல்லையே என வருத்தம் உள்ளதா? இனி உங்க பாதம் பளபளன்னு இருக்க நான் தான் பொறுப்பு. நான் சொல்லும் இந்த பேக்கினை ட்ரை செய்தால் நிச்சயம் பாதம் பளபளக்கும்.
தேவையானவை:
ரோஜாப் பூ- 3
ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்
தேங்காய்ப் பால்- 1கப்
செய்முறை:
1.ரோஜா இதழ்களுடன் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
2. அடுத்து அதனுடன் ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்துக் கலந்து பிரிட்ஜில் ஊறவிடவும்.
இந்த பேக்கினை 2 மணி நேரம் கழித்து எடுத்து தேங்காய் எண்ணெய் லேசாக சேர்த்து தடவவும், அடுத்து பாதத்தில் ஊறவைத்து கழுவினால் பாதம் பார்க்கவே பளபளப்பாக இருக்கும். இதனை வாரத்தில் 2 முறை செய்து வரவும்.