பொதுவாக தலைமுடியானது ஏன் கொட்டுகிறது?

100 பேரில் 80 பேர் சந்திக்கும் பிரச்சினை தலைமுடி உதிர்வு. அதிலும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்ட பையன்களுக்கோ/ பெண்களுக்கோ வேலை இல்லையே என்பது ஒரு பிரச்சினையாக ஒருபுறம் இருந்தாலும் இந்த முடி உதிர்வானது மற்றொரு பயமுறுத்தக்கூடிய பெரும் பிரச்சினையாக உள்ளது.
தலைமுடி உதிர்வு எதனால் ஏற்படுகிறதுன்னு தெரியமாலேயே நாம் அதற்கான தீர்வுகளைத் தேடிப் பின்பற்றி வருகிறோம். இப்போது தலைமுடி ஏன் கொட்டுகிறது என்று பார்க்கலாம்.
புரதச் சத்து உணவுகளைத் தவிர்த்தல்/ பற்றாக்குறை, சரியான தூக்கமின்மை, மன அழுத்தம், சரியான தலைமுடிப் பராமரிப்பின்மை (ஈரத்தலையில் தலை சீவுதல், அதிக நேரங்களில் விரித்த கூந்தல், எண்ணெய் தேய்க்காமை, வெந்நீரில் தலைக் குளித்தல்), பரம்பரை, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவைகள்தான்.
மேலும் வேதிப் பொருட்கள் சார்ந்த ஷாம்பூகள்/ சீரம்/ ஹேர்கிரீம் பயன்படுத்துதல் (முடிந்த அளவு கெமிக்கல் கலக்காத நாட்டு மருந்துக் கடை சீயக்காயினைப் பயன்படுத்துதல் நல்லது).
முறையற்ற உணவுப் பழக்கங்கள் (துரித உணவுகள், பொரித்த உணவுகள் அதிகம் உண்ணுதல்), போதிய தண்ணீர் குடிக்காதது (குறைந்தது 3.5 லிட்டர் தண்ணீர் குடித்தல்) போன்றவைகளும் பிரச்சினைகளுக்குக் காரணமாகும்.