தலைமுடி உதிர்வுக்குத் தீர்வு தரும் எளிமையான முட்டை ஹேர்பேக்!!
Updated: Oct 30, 2020, 00:37 IST

தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் கொண்டுவர நினைப்போர் நிச்சயம் இந்த முட்டை ஹேர்பேக்கினை பயன்படுத்தவும், முட்டையில் அதிக அளவில் புரதமானது உள்ளது. இந்த முட்டையில் ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
முட்டை - 1
பால் – ¼ கப்
விளக்கெண்ணெய்- 3 ஸ்பூன்
செய்முறை:
1. முட்டையினை உடைத்து பாலுடன் சேர்த்து நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.
2. அடுத்து அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து பிரிட்ஜில் வைத்து குளிர விட்டு மீண்டும் மிக்சியில் போட்டு அடிக்கவும்.
3. இதேபோல் 3 முறை செய்தால் முட்டை ஹேர்பேக் ரெடி.
இந்த முட்டை ஹேர்பேக்கினை தலைமுடியில் தேய்த்து, 30 நிமிடங்கள் கைகளால் வேர் நுனி, வேர்க் கால்கள் என அப்ளை செய்து அலசினால் தலைமுடி உறுதியாகும். முடி கொட்டும் பிரச்சினை காணாமல் போகும்.