Tamil Wealth

சிவப்பழகு தரும் அரிசி மாவு ஃபேஸ்பேக்!!

சிவப்பழகு தரும் அரிசி மாவு ஃபேஸ்பேக்!!

சிவப்பழகு பெற வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் நாம் கண்ட கண்ட பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து, வீட்டிலேயே இயற்கையான முறைகளைப் பின்பற்றி சருமத்தைப் பராமரிக்க வேண்டும், இவ்வாறு செய்தால் நிச்சயம் சிவப்பழகு பெற முடியும்.

தேவையானவை:

பச்சரிசி - 3 ஸ்பூன்,

சர்க்கரை- 1 ஸ்பூன்,

ஆலிவ் ஆயில்- 3 ஸ்பூன்

செய்முறை:

  1. பச்சரிசியினை கழுவி வெயிலில் காய வைத்து, மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  2. அரிசி மாவுடன் சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெயினை சேர்த்து 5 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தினால் போதும்.

அதாவது இந்த பச்சரிசி ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து நன்கு ஸ்க்ரப் செய்யவும், உண்மையில் மிகச் சிறந்த ஸ்கரப்பராக செயல்படும். முகத்தைக் கழுவி இதேபோல் மூன்று முறை தொடர்ந்து செய்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பளபளக்கும்.

Share this story