சிவப்பழகினைத் தரும் வரகு அரிசி ஃபேஸ்பேக்!!
Sep 4, 2020, 22:38 IST

வரகு அரிசி உடலுக்குத் தேவையான சத்துகளைக் கொண்டது என்பதை நாம் அறிவோம், ஆனால் இது சிவப்பழகு தரும் என்பது பொதுவாகப் பலரும் அறியாத விஷயமாகும். சிவப்பழகினைத் தரும் வரகு அரிசி ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வரகு அரிசி- 100 கிராம்
இளநீர்- 1 கப்
தக்காளி- 3
செய்முறை:
- வரகு அரிசியினை மிக்சியில் போட்டு பவுடர் போல் பொடித்துக் கொள்ளவும்.
- அடுத்து இளநீரில் தக்காளியினைப் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
- இறுதியில் இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து பிரிட்ஜில் ஊற வைக்கவும்.
இந்த வரகு அரிசி மாவு ஃபேஸ்ஃபேக்கினை முகத்தில் அப்ளை செய்து காயவிட்டால், முகத்தின் அழகானது நிச்சயம் கூடும். இதனை வாரத்தில் ஒருமுறை நிச்சயம் பயன்படுத்துதல் வேண்டும்.