முக அழகு கூட புதினா ஃபேஸ்பேக்!!
Jul 22, 2020, 10:54 IST

முகத்தின் அழகினைக் கூட்ட நினைத்தால், உங்களுக்கான சிறப்பான தீர்வாக இந்த புதினா ஃபேஸ்பேக்கானது இருக்கும். இப்போது நாம் இந்த புதினா ஃபேஸ்பேக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் -கைப்பிடியளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பால்- 4 ஸ்பூன்
செய்முறை:
1. புதினா இலைகளை பால்விட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
2. அடுத்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்தால் சிம்பிளான ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும், அதன்பின்னர் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் முக அழகானது கூடும்.