Tamil Wealth

சரும நிறத்தைக் கூட்டும் மாதுளம்பழ ஃபேஸ்பேக்!!

சரும நிறத்தைக் கூட்டும் மாதுளம்பழ ஃபேஸ்பேக்!!

சரும நிறத்தினைக் கூட்டுவதில் மாதுளம் பழத்திற்கு சிறப்பு பங்கு உண்டு, மாதுளம் பழத்தினை அப்படியே சாப்பிட்டாலும் சரி அதனை ஃபேஸ்பேக்காக செய்து அப்ளை செய்தாலும் சரும நிறம் அதிகரிக்கும் என்பது மட்டும் உறுதி.

தேவையானவை:

மாதுளம் பழம்- 1/2

பால்- கால் கப்

எலுமிச்சை- 2 ஸ்பூன்

செய்முறை:

1. மாதுளம் பழத்தினை உரித்து அதன் முத்துகளை பாலுடன் கலந்து அரைத்துக் கொள்ளவும்.

2. அடுத்து அதனுடன் எலுமிச்சை சேர்த்து கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

இந்த ஃபேஸ்பேக்கினை கை, கால், முகம் என அனைத்திலும்  அப்ளை செய்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும், இவ்வாறு செய்தால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்

Share this story