முக அழகு கூட மாதுளம்பழ ஃபேஸ்பேக்!!
Jul 24, 2020, 12:48 IST

முக அழகு கூட கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து, வீட்டிலேயே ஃபேஸ்பேக் செய்து பயன்படுத்துங்கள். அந்தவகையில் தற்போது மாதுளம்பழ ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
மாதுளம் பழம்- 1
பன்னீர்- 1 ஸ்பூன்
சர்க்கரை- 1 ஸ்பூன்
செய்முறை:
1. மாதுளம் பழத்தினை உரித்து அதன் விதைகளை எடுத்துக் கொள்ளவும்.
2. அடுத்து அதனுடன் பன்னீர் மற்றும் சர்க்கரை கலந்து அரைத்துக் கொள்ளவும்.
3. இந்த ஃபேஸ்பேக்கினை 15 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தவும்.
அதாவது இந்த ஃபேஸ்பேக்கினை முகம், கை, கால்களில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை வாரம் 1 முறை செய்து வந்தால் முக அழகானது கூடும்.