கோடை வெயிலை சமாளித்து சருமத்தை அழகாக்க உதவும் மாதுளை பேஸ் பேக்!
May 3, 2018, 16:44 IST

மாதுளைப் பழம் பொதுவாக எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் எளிதில் கிடைக்க கூடிய ஒன்று. இவை உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கிறது. உடலுக்கு மட்டுமில்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் மாதுளையை பயன்படுத்தலாம். இதற்கு காரணம் மாதுளையில் உள்ள அதிக அளவிலான வைட்டமின் கே, பி, சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் தான். மாதுளை பழத்தை பயன்படுத்தி பேஸ் மாஸ்க் செய்யும் முறையை இப்போது பார்க்கலாம்.
சருமத்தை அழகாக்க உதவும் மாதுளை பேஸ் பேக்:-
- மாதுளை பழத்தை அரைத்து அதனுடன் சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமத்தில் ஏற்பட்ட கருமை மற்றும் சரும அலர்ஜி போன்றவை நீங்கும்.
- மாதுளை பழத்துடன் கிரீன் டீ சேர்த்து பசையாக்கி முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் சருமத்தில் ஏற்படும் சரும சுருக்கம் மறையும்.
- மாதுளையை பசையாக்கி தேன் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக மின்னும்.
- மாதுளை பழத்துடன் கோ கோ பவுடரை கலந்து முகத்தில் அக்கலவையை தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தில் ஏற்பட்ட வறட்சி நீங்கி ஈரப்பசையுடன் எப்போதும் இருக்கும். இதனால் பருக்கள் வராது.
- மாதுளை பழ விதைகளுடன் தயிர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று மாறும். மேலும் சுருக்கமில்லாமல் அழகான சருமம் கிடைக்கும்.