சிவப்பழகினைத் தரும் பப்பாளிப் பழ ஃபேஸ்பேக்!!
Oct 20, 2020, 20:39 IST

பப்பாளிப் பழத்தினை எடுத்துக் கொண்டால் பொதுவாக கண்பார்வைத் திறனானது அதிகரிக்கும். மேலும் இதனை ஃபேஸ்பேக்காகப் பயன்படுத்தினால் சிவப்பழகினைப் பெற முடியும்.
தேவையானவை:
பப்பாளிப் பழம்- ½
பால்- ½ கப்
முந்திரி- 4
பாதாம் பருப்பு- 4
செய்முறை:
- பப்பாளிப் பழத்தினை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
- அடுத்து பாலில் முந்திரி மற்றும் பாதாம் பருப்பினை பாலில் ஊறவைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஊறவைத்த முந்திரி, பாதாம் பருப்பு, பப்பாளிப் பழத்தினை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
இந்த பப்பாளிப் பழம் ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து கழுவினால் நிச்சயம் சிவப்பழகினைப் பெற முடியும்.