Tamil Wealth

தலைமுடி உதிர்வுக்கு வெங்காய ஹேர்பேக்!!

தலைமுடி உதிர்வுக்கு வெங்காய ஹேர்பேக்!!

தலைமுடி உதிர்வு, தலைமுடி அடர்த்தி குறைதல், பொடுகுத் தொல்லை, தலை அரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு இந்த வெங்காயம் ஹேர்பேக் சிறப்பான ரிசல்ட்டினைக் கொடுக்கும், இதை செய்வது எப்படி என்றும் பயன்படுத்துவதும் என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:

வெங்காயம்- 2

ஆப்பிள் சீடர் வினிகர்- 2 ஸ்பூன்,

பூண்டு- 1

செய்முறை:

  1. வெங்காயம் மற்றும் பூண்டினை தோல் உரித்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  2. அடுத்து அதனுடன் நீர் விட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து அதனுடன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பிரிட்ஜில் வைக்கவும்.

இந்த வெங்காய ஹேர்பேக்கினை தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்து சீயக்காய் கொண்டு அலசவும்.

Share this story