Tamil Wealth

சருமப் பிரச்சினைகளுக்கு பெஸ்ட் ரிசல்ட் தரும் வெங்காய ஃபேஸ்பேக்!!

சருமப் பிரச்சினைகளுக்கு பெஸ்ட் ரிசல்ட் தரும் வெங்காய ஃபேஸ்பேக்!!

வெங்காயம் தலைமுடிப் பிரச்சினைக்கு பெஸ்ட் ரிசல்ட் தரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இது சருமப் பிரச்சினைகளுக்கு பெஸ்ட் ரிசல்ட் தரும் என்பது உங்களுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருக்கும், ஆம் இப்போது சருமப் பிரச்சினைகளுக்கு பெஸ்ட் ரிசல்ட் தரும் வெங்காய ஃபேஸ்பேக் எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

கடலை மாவு-1/2 டீஸ்பூன்,

சந்தன பவுடர்- 1/2 ஸ்பூன்

வெங்காயம்- 1/2

தயிர்- 3 ஸ்பூன்

செய்முறை:

1.  தயிரில் கடலை மாவினைக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவிட்டு சந்தனப் பவுடர் சேர்க்கவும்.

2. அடுத்து வெங்காயத்தினை தண்ணீர் விட்டு அரைத்து பேஸ்ட் செய்து அதனை இதனுடன் கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து பின்னர் ஊறவிடவும். அதன்பின்னர் கழுவினால் சருமம் பொலிவோடு இருக்கும்.

Share this story