Tamil Wealth

முடி உதிர்வினைக் கட்டுக்குள் வரச் செய்யும் எண்ணெய்!!

முடி உதிர்வினைக் கட்டுக்குள் வரச் செய்யும் எண்ணெய்!!

முடி உதிர்வினைக் கட்டுப்படுத்தும் எண்ணெய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

விளக்கெண்ணெய்- 100 மில்லி

கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்

மிளகு- 1 ஸ்பூன்

நெல்லிக்காய்- 3

செய்முறை:

1. நெல்லிக்காயினை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. அடுத்து கருஞ்சீரகத்தையும், மிளகையும் லேசாக வறுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

3. விளக்கெண்ணெயினை சூடாக்கி அதில் இவை அனைத்தையும் போட்டு ஒருநாள் முழுவதும் ஊறவிடுங்கள்.

இந்த எண்ணெயினை தலைக்குத் தேய்த்து வந்தால் முடி உதிர்வானது கட்டுக்குள் வரும்.

Share this story