Tamil Wealth

முகம் வெள்ளையாக ஓட்ஸ் ஃபேஸ்பேக்!!

முகம் வெள்ளையாக ஓட்ஸ் ஃபேஸ்பேக்!!

முகம் வெள்ளையாக வேண்டும் என நினைப்போர் ஆயிரக் கணக்கில் செலவழிக்கத் தேவையில்லை. மிகவும் மலிவான விலையிலான பொருட்களைக்  கொண்டு வீட்டிலேயே ஓட்ஸ் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - கால் கப்

பச்சை பயறு மாவு - கால் கப்

கடலைமாவு - கால் கப்

ஓட்ஸ் - கால் கப்

பால்- கால் கப்

செய்முறை:

1. ஓட்ஸினை நன்கு வாணலியில் வறுத்து மிக்சியில் போட்டு அரைத்துப் பொடித்துக் கொள்ளவும்.

2. அடுத்து ஓட்ஸ் பவுடர், அரிசி மாவு, பச்சை பயறு மாவு, கடலைமாவு என அனைத்தையும் பாலில் போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள்.

3. இப்போது ஓட்ஸ் ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் தூங்கச் செல்லும் முன் தயார் செய்து, முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்துவந்தால் முகம் வெள்ளையாகும் என்பது மட்டும் உறுதி.

Share this story