பொடுகுத் தொல்லைக்கு சிறந்த தீர்வினைக் கொடுக்கும் வேப்பங்கொழுந்து எண்ணெய்!!
Aug 24, 2020, 19:00 IST

பொடுகினை ஒழித்துவிட்டால், தலைமுடி கொட்டுதல், நுனி முடி வெடித்தல் என்பது போன்ற பிரச்சினைகள் நிச்சயம் இருக்கவே இருக்காது. அந்தவகையில் தற்போது பொடுகினை காணாமல் போகச் செய்யும் வேப்பங்கொழுந்து எண்ணெய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வேப்பம் கொழுந்து- 100 கிராம்
தேங்காய் எண்ணெய்- 50 மில்லி
வெள்ளை மிளகு- 1 ஸ்பூன்
செய்முறை:
- வெள்ளை மிளகினை லேசாக வறுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- அடுத்து வேப்பம் கொழுந்தினை சாறு வெளியே வராதபடி நசுக்கிக் கொள்ளவும்.
- அடுத்து மிளகுத் தூள் மற்றும் வேப்பம் கொழுந்தினை தேங்காய் எண்ணெயில் போட்டு லேசாக காய்ச்சவும்.
இந்த எண்ணெயினைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பொடுகு என்ற ஒன்று நிச்சயம் உங்கள் தலையில் இருக்காது.