கொத்து கொத்தாக தலைமுடி வளர இயற்கை சீயக்காய் பொடி!!
Aug 28, 2020, 11:30 IST

தலைமுடி உதிர்விற்கு ஹேர் ஆயில் ஹேர் கிரீம், சீரம், இயற்கை சீயக்காய் என ட்ரை செய்து சோர்ந்துவிட்டீர்களா? இனி கவலையே வேண்டாம். கடைசியாக இந்த ஒரு இயற்கையான சீயக்காய் பொடியினை மட்டும் ட்ரை செய்து பாருங்கள்.
இப்போது இயற்கையான பாரம்பரிய சீயக்காய் பொடி தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
ஆவாரம்பூ- 150 கிராம்
கறிவேப்பிலை- 150 கிராம்
வெந்தயம்- 4 ஸ்பூன்
பூந்திக் கொட்டை- 50 கிராம்
மோர்- 1 கப்
செய்முறை:
- ஆவாரம்பூவையும், கறிவேப்பிலையையும் மொறுமொறுவென காய வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து காயவைத்த ஆவாரம்பூ மற்றும் கறிவேப்பிலையுடன் பூந்திக் கொட்டை மற்றும் வெந்தயம் சேர்த்து அரவை மில்லில் அரைத்துக் கொள்ளவும்.
- இந்தப் பொடியுடன் மோர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த பொடியை தலைமுடியில் தேய்த்து ஊறவிடவும், மேலும் வேர்க்கால்களில் முக்கியமாக தேய்த்தால் ஜில்லென்று இருக்கும். இதனை வாரத்தில் எப்போதெல்லாம் தலைக்குக் குளிக்கிறீர்களோ அப்போதெல்லாம் நிச்சயம் தேய்த்துக் குளிக்கவும்.