சிவப்பழகினைத் தரும் நாட்டு வாழைப்பழ ஃபேஸ்பேக்!!
Aug 4, 2020, 13:00 IST

சிவப்பழகினைத் தரும் வகையில் பல வகையான ஃபேஸ்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் தற்போது பெஸ்ட் ரிசல்ட் தரும் வாழைப்பழ ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
நாட்டு வாழைப்பழம்- 1
தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
தயிர்- கால் கப்
செய்முறை:
1. நாட்டு வாழைப்பழத்தினை தயிர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பயன்படுத்தவும்.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவும், அதன்பின்னர் 20 நிமிடங்கள் நன்கு ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் சிவப்பழகு பெறும்.