கூந்தல் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க என்னென்ன சாப்பிட வேண்டும்?

தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று ஆசை இல்லாத ஆண்களையோ/ பெண்களையோ பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு நபர் இந்த பூவுலகில் இல்லை என்றே சொல்லலாம். தலைமுடி அடர்த்தியாக இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள்தான்.
அப்படி என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று கேட்கிறீர்களா? அதாவது நமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்துவிட்டாலே போதும், நிச்சயம் உங்கள் முடியின் அடர்த்தியானது அதிகரித்துவிடும்.
தலைமுடி அடர்த்தியாக நாம் சாப்பிட வேண்டியவை:
முருங்கைக் கீரை- வாரம் 1 முறை
கருப்பு உலர் திராட்சை (ஊறவைத்தது) – தினமும் 4 முதல் 5
நெல்லிக்காய்- தினமும் 1
பேரிச்சம் பழம்- தினமும் 1
பீட்ரூட் ஜூஸ் - வாரத்தில் 3 முறை
கேரட் – தினமும் 1
முளைக்கட்டிய பாசிப்பயறு- 100 கிராம்
மாதுளை- 1
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலின் ஹீமோ குளோபின் விறுவிறுவென அதிகரித்துவிடும். நிச்சயம் முடியின் அடர்த்தியும் கூடுவதை கண்கூடப் பார்க்க முடியும். பல ஆயிரங்கள் செலவழித்து பொய்யான விளம்பரங்களை நம்பி கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கி தேய்ப்பதைவிட, சிறிதளவு செலவு செய்து உடல் ஆரோக்கியத்தையும், தலைமுடி அடர்த்தியையும் அதிகரிக்கலாம்.