தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கும் புதினா ஆயில்!!
Aug 23, 2020, 20:11 IST

புதினா ஆயில் ஆனது தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகின்றது. தற்போது புதினா எண்ணெயினைப் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
மிளகு- 2 ஸ்பூன்
புதினா- கைப்பிடியளவு
தேங்காய் எண்ணெய்- 150 மில்லி
செய்முறை:
- மிளகினை மிக்சியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்
- அடுத்து புதினாவை சுத்தம் செய்து தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவிடவும்.
- அடுத்து அதனுடன் மிளகினையும் போட்டு ஊறவிடவும்.
இந்த எண்ணெயை தலையில் தேய்த்து ஊறவிட்டு சீயக்காய் கொண்டு முடியினை அலசவும், இதனை வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் முடி உதிர்வானது நிச்சயம் காணாமல் போகும்.