Tamil Wealth

தலைமுடி உதிர்வுக்கு பெஸ்ட் ரிசல்ட் கொடுக்கும் மிளகு ஹேர்பேக்!!

தலைமுடி உதிர்வுக்கு பெஸ்ட் ரிசல்ட் கொடுக்கும் மிளகு ஹேர்பேக்!!

தலைமுடி உதிர்வு பிரச்சினை என்பது பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும். அந்தப் பிரச்சினைக்கான ஒரு சிம்பிளான தீர்வினை நான் இப்போது சொல்கிறேன்.

தேவையானவை:

கருப்பு மிளகு- 12

தேன்- 2 ஸ்பூன்

தயிர்- 1/2 கப்

செய்முறை:

1. கருப்பு மிளகினை லேசாக வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.

2. அந்த கப் தயிருடன் கருப்பு மிளகுத் தூள் கலந்து கொள்ளவும்.

3. அடுத்து தேன் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து அதனை முடியில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊறவிடவும், அதன்பின்னர் சீயக்காய் போட்டு முடியினை நன்கு அலசவும். இதனை நீங்கள் தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் செய்துவர சிறப்பான ரிசல்ட் கிடைக்கும்.

Share this story