முடி கொட்டுவதைக் கட்டுக்குள் வைக்கும் கறிவேப்பிலை மாஸ்க்!!
Aug 18, 2020, 12:00 IST

முடி கொட்டும் பிரச்சினைக்கு நாம் இதுவரை பலவகையான ஹேர் மாஸ்க்குகளைப் பார்த்திருக்கிறோம், அந்தவகையில் நாம் இப்போது கறிவேப்பிலை மாஸ்க்கினை தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வெந்தயம்- 2 ஸ்பூன்,
சீரகம்- 2 ஸ்பூன்
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
செய்முறை:
1. வெந்தயம் மற்றும் சீரகத்தை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
2. அடுத்த நாள் இதனை தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும்.
3. அதேபோல் கறிவேப்பிலையை மற்றொரு புறம் காயவைத்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தலையில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிடவும், அவ்வாறு ஊறவிட்டு சீயக்காய் போட்டு அலசினால் முடியானது உதிராமல் புதிய முடியினை வளரச் செய்யும்.