Tamil Wealth

வயது அதிகமானாலும் இளமையாகத் தோற்றமளிக்க இதை மட்டும் செய்தால் போதும்!!

வயது அதிகமானாலும் இளமையாகத் தோற்றமளிக்க இதை மட்டும் செய்தால் போதும்!!

சிறு வயதில் பிறந்தநாள் வருகிறது என்றால் அது பலருக்கும் கொண்டாட்டமாகவே இருக்கும். ஆனால் இதே பிறந்தநாள் கல்லூரி வாழ்க்கையினை முடித்த பின்னர் வருகிறது என்றால் எல்லோருக்கும் கூடுதல் பயம் இருக்கவே செய்யும். காரணம் நமது வயது கூட கூட நமது இளமைத் தோற்றமும் காணாமல் போய்விடும் என்பதால்தான்.

இளமைத் தோற்றத்தினைப் பேண தயவுக்கூர்ந்து கிரீம்களை நம்புவதைத் தவிர்த்து உங்களை நம்புங்கள். அதாவது ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைபிடியுங்கள். இப்போது இளமைத் தோற்றத்தைப் பேண எந்த மாதிரியான உணவுப் பொருட்கள் சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க.

உயிரின் முதன்மை ஆதாரமான தண்ணீரை உங்களால் எந்த அளவு முடிகிறதோ, அந்த அளவு குடியுங்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 2  டம்ளர் என்ற அளவில் குடித்தால்கூட நாம் ஒருநாளைக்கு சாதாரணமாக 3 முதல் 4 லிட்டர் குடித்துவிடலாம். இது உங்கள் தோலை சுருக்கம், வறட்சி போன்ற முக்கியப் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும். மேலும் பொரித்த, வறுத்த உணவுகளை முழுமையாகத் தவிர்க்க முடியாவிட்டாலும் குறைத்துக் கொள்ளுங்கள்.

இனிப்பு, கார தின்பண்டங்கள் தின்பதற்கு மாற்றாக பழங்கள், பல வண்ணக் காய்கறிகள், முளைகட்டிய பயறு வகைகள், பழச்சாறுகள் என நம் உடலின் நீர்ச் சமநிலைக்கு உதவும் உணவுகள் எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவு இளமைத் தோற்றத்தோடு காணப்படுவீர்கள்.

Share this story