தலைமுடியினை அடர்த்தியாக்கும் செம்பருத்திப் பூ ஹேர்பேக்!!
Aug 5, 2020, 11:00 IST

தலைமுடி கொட்டுதல் என்பது பலருக்கும் இருக்கும் பிரச்சினையாகும். அந்தவகையில் தற்போது தலைமுடியினை அடர்த்தியாக்கும் செம்பருத்திப் பூ ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
செம்பருத்திப்பூ இலைகள்- 10
கறிவேப்பிலை- கைப்பிடியளவு,
மருதாணி இலை- கைப்பிடியளவு
பால்- கால் கப்
செய்முறை:
1. செம்பருத்திப்பூ இலைகள், கருவேப்பிலை, மருதாணி இலை இவை மூன்றையும் பாலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இந்த செம்பருத்தி ஹேர்பேக்கினை தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும். அதன்பின்னர் சீயக்காய் தேய்த்து முடியை அலசினால் முடி உதிர்வது குறையும். முடி புதிதாக வளர்வதுடன், முடி அடர்த்தியும் அதிகரிக்கும்.