தலைமுடி அடர்த்தியாகச் செய்யும் ஹேர்பேக்!

தலைமுடி உதிர்வு என்பது இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினையாகும், இந்த தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கவும், புதியதாக முடியினை வளரச் செய்யவும்கூடிய ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
கடுக்காய்- 1,
நெல்லிக்காய்- 1,
வேப்ப எண்ணெய்- 2 ஸ்பூன் ,
வெண் மிளகு- 5
செய்முறை:
1. நெல்லிக்காயினை துண்டுகளாக்கிக் காய வைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து கடுக்காயினையும், வெண் மிளகையும் உரலில் உடைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து நெல்லிக்காயினை அரைத்து, இந்தக் கலவையுடன் வேப்ப எண்ணெயினை நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த ஹேர்பேக்கினை கஞ்சியில் கலந்து தலைக்கு தேய்த்து, முடியை அலச வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்துவந்தால் முடியின் அடர்த்தி நிச்சயம் கூடும்.