தலைமுடி அடர்த்தியாக்க வீட்டிலேயே ரொம்பவும் சிம்பிளான ஹேர்பேக்!
Aug 7, 2020, 16:30 IST

தலைமுடி அடர்த்தியாக வீட்டிலேயே ரொம்பவும் சிம்பிளான ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வெந்தயம்- 2 ஸ்பூன்
அரிசி களைந்த நீர்- 1 கப்
விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை:
1. வெந்தயத்தை அரிசி களைந்த நீரில் 2 மணி நேரம் ஊறவைத்து எடுத்து இதனை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து இதனை சூடாக்கி அதனுடன் விளக்கெண்ணெய் கலந்தால் சிம்பிளான ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினை தலையில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் போட்டு அலசினால் முடி கொட்டுவது நின்றுவிடும். இதனை வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்துவந்தால் முடியின் அடர்த்தியானது கூடும்.