முகத்தின் நிறத்தைக் கூட்டும் வெந்தய ஃபேஸ்பேக்!!
Aug 8, 2020, 16:30 IST

முகத்தின் நிறத்தைக் கூட்டும் வகையில் நாம் பலவகையான ஃபேஸ்பேக்குகளைப் பார்த்துள்ளோம். அந்த வகையில் இப்போது முகத்தின் நிறத்தைக் கூட்டும் வெந்தய ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர்- ஸ்பூன்
செய்முறை:
1. வெந்தயத்தை முதல்நாள் இரவே நீரில் ஊறவைக்கவும்.
2. அடுத்து ஊறவைத்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தவும்.
இந்த பேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து முகத்தினை கழுவ வேண்டும். இதனை வாரத்தில் 3 முறை செய்து வந்தால் முகத்தின் நிறம் கூடுவது என்பது உறுதி.