முகச் சுருக்கப் பிரச்சினைக்கு பெஸ்ட் ரிசல்ட் கொடுக்கும் ஃபேஸ்பேக்!!

முகச் சுருக்கப் பிரச்சினை என்பது குளிர் காலத்தில் அதிகம் பேர் சந்திக்கும் பிரச்சினையாகும். மேலும் வறண்ட சருமப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் இது பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. தற்போது இந்த முகச் சுருக்கப் பிரச்சினைக்குத் தீர்வு தரும் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
1. அரிசி மாவு- 50 கிராம்
2. ஆலிவ் ஆயில்- 2 ஸ்பூன்
3. தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
4. தேங்காய்ப் பால் – கால் கப்
செய்முறை:
1. அரிசி மாவினை வெயிலில் காயவைக்கவும்.
2. அடுத்து இந்த மாவினை தேங்காய்ப் பாலில் 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
3. அடுத்து இதனுடன் ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெயினைச் சேர்க்கவும்.
4. இந்தக் கலவையினை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் பெஸ்ட் ரிசல்ட் கொடுக்கும்.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்யவும், அடுத்து பஞ்சினால் முகத்தைத் துடைத்துவிட்டு மீண்டும் பேஸ்பேக்கினைக் கொண்டு ஸ்கரப் செய்து கழுவினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போகும்.