மூணே பொருளில் மலிவான ஃபேஸ்பேக் செய்வோமா?

பொதுவாக நாம் நம்முடைய அழகினைப் பராமரிக்க நாம் அதிக விலையிலான கிரீம்களையும் கூட காசு கொடுத்து வாங்கிவிடுவோம். ஆனால் அந்த விலை அதிகமான கிரீம்களை சிறப்பான ரிசல்ட் கொடுக்கும் ஃபேஸ்பேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வெள்ளரிக் காய்- 1
ஓட்ஸ் - 2 ஸ்பூன்
கற்றாழை ஜெல்- 1 கப்
செய்முறை:
1. ஓட்ஸினை மிக்சியில் போட்டு பொடித்து தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. அதன்பின்னர் வெள்ளரிக்காயினை சிறு துண்டுகளாக்கி மிக்சியில் போட்டு வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து கற்றாழை ஜெல்லுடன் அரைத்த வெள்ளரிக்காய் பேஸ்ட், ஊறவைத்த ஓட்ஸ் போன்ற அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிட்டு, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வரவும். இவ்வாறு செய்தால் ஃபேஸ்பேக் ரெடி.