முடியானது காடுபோல் வளர வெள்ளைக்கரு ஹேர்பேக்!!
Aug 27, 2020, 16:30 IST

முடி அடர்த்தியினை அதிகரிக்க முதலில் நமது தலைமுடிக்கு புரதமானது தேவைப்படுகின்றது, அதனால் புரதச் சத்து அதிகம் நிறைந்த முட்டையின் வெள்ளைக் கருவினை பயன்படுத்துதல் வேண்டும். அந்தவகையில் முட்டையின் வெள்ளைக் கருவில் ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
முட்டையின் வெள்ளைக்கரு – 2
விளக்கெண்ணெய்- 3 ஸ்பூன்
நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
செய்முறை:
- முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும்.
- அடுத்து விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெயினை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
- அடுத்து இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பயன்படுத்தவும்.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடியின் வேர்க்கால்களில் அப்ளை செய்து ஊறவிட்டு முடியினை அலசி விடவும். இதனை வாரத்தில் இரண்டுமுறை செய்துவந்தால் முடியின் அடர்த்தியானது நிச்சயம் கூடும்.