Tamil Wealth

கடலை மாவினால் முகத்தை கழுவினால் என்ன பயன் தெரியுமா?

கடலை மாவினால் முகத்தை கழுவினால் என்ன பயன் தெரியுமா?

நம்மில் பெரும்பாலும் தினமும் முகத்தை கழுவ சோப்பை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதை அதிக அள்வில் செய்யும் போது முகத்தில் உள்ள எண்ணெய் பசை முழுவதும் வெளியேறிவிடுகிறது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதை தடுப்பதற்கு சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்.

கடலை மாவினால் முகத்தை கழுவினால் கிடைக்கும் பயன்கள்:-

  • சோப்பினை பயன்படுத்தி முகத்தை கழுவினால் வெயிலால் ஏற்படும் கருமையான சருமத்தை சரி செய்ய முடியாது. ஆனால் கடலை மாவை பயன்படுத்தி முகத்தை கழுவினால் கருமை நீங்கி அழகு பெறலாம்.
  • கடலை மாவை பயன்படுத்தி முகத்தை கழுவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் முற்றிலும் வெளியேற்றப்பட்டு புதிய செல்கள் உருவாகும், இதனால் சருமம் பளிச்சென்று மாறும்.
  • இதில் அதிக அளவில் உள்ள ப்ளீச்சிங் தன்மை முகத்தை வெள்ளையாக்குவது மட்டுமில்லாமல் முகப்பரு வராமல் பாதுகாக்கும்.
  • தூக்கமின்மையால் ஏற்படும் கருவளையத்தை சரி செய்ய கடலை மாவினால் முகத்தை கழுவினால் கருவளையம் எளிதில் மறையும்.
  • சிலருக்கு சருமத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் புள்ளிகளை சரி செய்ய கடலை மாவினால் முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

Share this story