வெயில் காலத்தில் சருமத்தில் ஏற்படும் பிரச்சனையை சரி செய்ய தக்காளியை பயன்படுத்தும் முறை பற்றி தெரியுமா?
Apr 27, 2018, 10:14 IST

அனைத்து சமையலிலும் சேர்க்க கூடிய ஒரு பொருளாக இது உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. இதன் விலை குறைவாக இருப்பதோடு மட்டுமில்லாமல் சந்தைகளில் எளிதில் கிடைக்க்க் கூடிய பொருளாகவும் உள்ளது. இதை சருமத்தின் அழகை அதிகரிக்க பயன்படுத்தக் கூடிய முறை பற்றி இப்போது பார்க்கலாம்.
- தக்காளி பழத்தின் சாற்றினை சருமத்தில் தடவி உலர வைத்தால் சிறந்த சன் ஸ்கிரீன் போன்று செயல்பட்டு சருமத்தை பாதுகாக்கும். இதற்கு காரணம் இதில் உள்ள லைகோபைன் எனும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் தான்.
- தினமும் தக்காளி பழத்தின் சாறினை கொண்டு மசாஜ் செய்தால் சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க முடியும்.
- எலுமிச்சை பழச் சாறினை தக்காளி பழச் சாறுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் சருமத்தில் உள்ள துளைகள் சரியாகி முகப்பருக்கள் வருவது குறையும்.
- எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தினமும் தக்காளி பழச் சாறினை முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.
- கோடையில் ஏற்படும் சரும எரிச்சலை தடுக்க தினமும் தக்காளி பழத்தினை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
- தக்காளி பழச் சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவினால் சருமம் அழகாக மாறுவது மட்டுமில்லாமல் மென்மையாகவும் மாறும்.
- தக்காளி பழத்தை தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசினால் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.