சரும அழகை அதிகரிக்க உதவும் பழங்களை பற்றி தெரியுமா?
May 4, 2018, 10:30 IST

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க எப்போதும் அதிக அளவிலான புரோட்டின் மற்றும் விட்டமின்கள் தேவைப்படுகிறது. பெரும்பாலும் இவை பழங்களில் அதிகம் உள்ளது. பழங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் உங்கள் அழகையும் அதிகரித்து தோலில் சுருக்கமில்லாமல் பளபளப்பாக்கவும் உதவுகிறது. எந்தெந்த பழங்கள் சரும அழகை அதிகரிக்க உதவுகிறது என்று இப்போது பார்க்கலாம்.
சரும அழகை அதிகரிக்க உதவும் பழங்கள்:-
- மாம்பழம் அதிக அளவில் சாப்பிடுவதால் அதில் உள்ள விட்டமின் ஈ, ஏ, கே, சி, போன்றவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை மறைத்து முதுமை வராமல் தடுக்கிறது.
- எலுமிச்சை பழம், வெண்ணெய், தேன் மூன்றையும் கலந்து முகத்தில் தடவினால் சரும சுருக்கம் மறைந்து எப்போதும் இளமையாக இருக்கலாம்.
- பப்பாளியை அதிக அளவில் சாப்பிட்டால் அதில் உள்ள என்சைம் சருமத்தில் இறந்த செல்களை வெளியேற்றி புதிய செல்களை உற்பத்தி செய்கிறது. மேலும் இதை சருமத்தில் பூசுவதன் மூலம் சுருக்கங்கள் வராமல் தடுக்கலாம்.
- வாழைப்பழத்துடன் தேன் கலந்து முகத்தில் தடவினால் இளமையான சருமம் கிடைக்கும். இதில் உள்ள பொட்டாசியம் தோல் மற்றும் முடிக்கும் நன்மை அளிக்கிறது.
- ஆப்பிளை சாப்பிடுவதால் சருமத்தில் புதிய செல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. பாலுடன் கலந்து முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெறும்.