சரும நிறத்தை அதிகரிக்கச் செய்யும் வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக்!!
Aug 12, 2020, 16:50 IST

சரும நிறத்தினை அதிகரிப்பதில் நீர்ச் சத்து உள்ள பழங்கள், காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில் தற்போது நீர்ச் சத்து அதிகமுள்ள ஒரு பழமான வெள்ளரிக்காயினைக் கொண்டு ஃபேஸ்பேக் எவ்வாறு தயார் செய்வது என்றும் பார்க்கலாம்.
தேவையானவை:
வெள்ளரிக்காய்- 1
கேரட்- 1/2,
முந்திரி- 2
தேன்- 1 ஸ்பூன்
செய்முறை:
1. வெள்ளரிக்காய் மற்றும் கேரட்டினை நறுக்கி அதனுடன் முந்திரி மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து அதனுடன் தேன் சேர்த்து கலந்தால் வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகம், கை, கால்களில் தடவி 30 நிமிடங்கள்ஊறவைத்து பின்னர் கழுவினால் சருமத்தின் நிறமானது நிச்சயம் கூடும்.