முக அழகினைக் கூட்டும் செர்ரிப் பழ ஃபேஸ்பேக்!!
Aug 23, 2020, 15:30 IST

முக அழகினைக் கூட்டும் பேஸ்பேக்குகளில் பலவற்றை நாம் பார்த்துள்ளோம், அந்தவகையில் தற்போது முகத்தின் பொலிவாக்கும் செர்ரிப் பழ ஃபேஸ்பேக் ட்ரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
செர்ரிப் பழம்- 4
தயிர்- 2 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில்- 2
இளநீர்- 1 கப்
செய்முறை:
- இளநீர் மற்றும் தயிரினை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
- அடுத்து அந்தக் கலவையில் செர்ரிப் பழத்தினை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- அடுத்து அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.
செர்ரிப் பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதனை வாரம் 2 முறை செய்து வர வேண்டும்.