சிவப்பழகினைத் தரும் பீட்ரூட் ஃபேஸ்பேக்!!
Aug 22, 2020, 11:00 IST

சிவப்பழகினைப் பெற வேண்டும் என்ற ஆசை இல்லாத நபர் என்று யாராவது இருக்கிறார்களா? அப்படியெனில் இந்த ஃபேஸ்பேக் டிப்ஸ் ஆனது அனைவருக்குமானது. இதனை நிச்சயம் நீங்கள் பயன்படுத்தி, ரிசல்ட்டினைப் பெறுங்கள்.
தேவையானவை:
பீட்ரூட்- ½
தயிர்- ½ கப்,
கடலை மாவு- ½ கப்,
எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
செய்முறை:
- பீட்ரூட்டினை சிறு துண்டுகளாக்கி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
- அடுத்து அதனுடன் தயிர், கடலை மாவு, எலுமிச்சை சாறு சேர்ந்து கலக்கவும்.
- இதனை 15 நிமிடங்கள் ஊறவைத்து பிரிட்ஜில் வைக்கவும்.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து, மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இதனை வாரம் 2 முறை தொடர்ந்து பயன்படுத்தவும்.