தலைமுடி அடர்த்திக்கான வாழைப்பழ ஹேர்பேக்!!
Oct 22, 2020, 14:32 IST

தலைமுடி அடர்த்தியாக முடியினை சரியான முறையில் பராமரிப்பு செய்தல் அவசியம், இல்லையேல் முடி உதிர்வானது கட்டுக்குள் வைக்க முடியாத அளவு போய்விடும். இப்போது வாழைப்பழ ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வாழைப்பழம்- 1
இஞ்சி- 1 ஸ்பூன்
தேங்காய்ப் பால்- 1 ஸ்பூன்
ஆலிவ் ஆயில்- 1 ஸ்பூன்
செய்முறை:
- வாழைப்பழத்தை துண்டுகளாக்கி தேங்காய்ப் பாலில் ஊறவைக்கவும்.
- அடுத்து இஞ்சியின் தோலினை உரித்து மிக்சியில் போட்டு சாறினை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
- அடுத்து வாழைப்பழத்தையும் அரைத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
இந்த ஹேர் பேக்கினை தலைமுடியின் வேர்க் கால்கள், நுனு முடி என அனைத்து இடத்திலும் நன்கு அப்ளை செய்து மசாஜ் செய்யவும். இதனை வாரத்தில் இரண்டு முறை கட்டாயம் செய்து வந்தால் முடியின் அடர்த்தி நிச்சயம் கூடும்.