முகம் பளபளக்க ஆப்பிள் ஃபேஸ்பேக் செய்யலாமா?

ஆப்பிள் சாப்பிடுவது நமது உடலுக்கு நல்லது என்பதை நாம் சிறு வயதிலேயே படித்து இருப்போம். அந்த ஆப்பிள் சாப்பிடும்போது எவ்வளவு நல்லதோ அதே அளவு முகத்திற்கு அப்ளை செய்யும்போதும் நல்லது.
தேவையானவை:
ஆப்பிள்- 1
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
ஜாதிபத்திரி- தேவையான அளவு
புதினா- சிறிதளவு
செய்முறை:
1. ஆப்பிளை தோல் நீக்கி வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்.
2. இதனுடன் எலுமிச்சை சாறு, ஜாதிபத்திரி, புதினா, சேர்த்துக் கலந்தால் ஆப்பிள் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை நீங்கள் பிரிட்ஜில் 15 வைத்து அதன்பின்னர், முகத்தில் லேசாக அப்ளை செய்யவும். அடுத்து பஞ்சினைக் கொண்டு முகத்தினை மசாஜ் செய்யவும். இந்த முறையினை 5 முறை வரை தொடர்ந்து பின்பற்றி, அதன்பின்னர் முகத்தினை குளிர்ந்த நீரால் கழுவவும்.