கற்றை கற்றையாக முடி வளர கற்றாழை ஹேர்பேக்!!
Aug 21, 2020, 12:00 IST

தலைமுடியினை அடர்த்தியாக்கும் தன்மை பொதுவாகவே கற்றாழையில் உள்ளது, அந்தக் கற்றாழையில் நாம் ஏற்கனவே ஹேர்பேக்கினை ட்ரை செய்து இருப்போம். இப்போது கற்றாழை ஹேர்பேக் செய்வது எப்படி செய்வது என்றும், பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.
தேவையானவை:
கற்றாழை ஜெல்- 1 கப்
கருப்பு மிளகு- 2 ஸ்பூன்,
விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை:
1.கருப்பு மிளகினை லேசாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
2. அடுத்து இந்த மிளகுப் பொடியினை விளக்கெண்ணெயில் ஊற வைக்கவும்.
3. இதனை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து நன்கு கலந்து பயன்படுத்தவும்.
அடுத்து இந்த ஹேர்பேக்கினை தலையில் தேய்த்து ஊறவிட்டு முடியினை அலசினால், தலைமுடியின் அடர்த்தியாகும். இதனை தலைக்குக் குளிக்கும்போது எப்போதும் செய்யவும்.