நூறு வயசு வரைக்கும் வாழ என்ன பண்ணலாம்

காலம் மாற மாற மனிதனின் சராசரி வாழ்நாள் ஆண்டு காலமும் குறைந்து கொண்டே வருகிறது. நம் பாட்டி, தாத்தா ஆகியோரின் வாழ்நாள் காலம் சுமார் 90 ஆண்டுகளாக இருந்தது. நமது பெற்றோர் காலத்தில் 60 ஆண்டுகளாக குறைந்தது. நமது ஆயுட்காலம் சுமார் 45 ஆண்டுகள் என கூறப்பட்டுள்ளது. நூறு ஆண்டு வரை வாழ சில விஷயத்தை மட்டும் செய்தால் போதும்.

செய்ய வேண்டியவை:

எந்த ஒரு காரியத்தையும் பெரிதாக நினைக்காமல் இருந்தாலே போதும். சிறியவர்கள், முதியவர்களுடன் கொஞ்சம் சகஜமாக பேசி சிரித்தாலே போதும்.

எந்த நேரமும் அலுவலகத்தில் கொடுத்த வேலையை எண்ணாமல் இருக்க வேண்டும். தினமும் அரை மணி நேரம் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

பிறர் நம்மை பற்றி என்ன பேசுவார்களோ என்ற எண்ணத்தை கை விட வேண்டும். தினமும் தியானம் அல்லது யோக பயிற்சி செய்தல் நல்லது.

மற்றவர்களை கேலி, கிண்டல் செய்யாமல் இருந்தால் போதுமானது. மேலும் உங்களின் கற்பனை திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.

மற்றவர்களை பற்றி நம்முடன் ஒப்பிட்டு பார்க்காமல் இருப்பது நல்லது அது மட்டுமில்லாமல் மற்றவர்களின் உணர்ச்சிக்கு இடம் தர வேண்டும்.

இயற்கை காய்கறிகளை மட்டுமே அதிகம் சாப்பிடலாம். எல்லோர் மீதும் அன்பு செலுத்த வேண்டும். நாம் சிரித்து வாழ்வதுடன் பிறரை சிரித்து வாழ வைக்க வேண்டும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.