ஜனவரி 24 – ல் வெளிவருகிறது யமஹா எப்இசட் 250 பைக்

ஜனவரி 24 – ல் வெளிவருகிறது யமஹா எப்இசட் 250 பைக்:-

இரு சக்கர வாகனம் வாங்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் கனவாக இருப்பது. யமஹா நிறுவனத்தின் ஆர்- 15 மற்றும் எப்இசட் ஆகிய இரு மாடல்கள் மட்டுமே.

ஆனால் அதற்கு அடுத்த படியாக அந்த நிறுவனம் எப்இசட் பைக்கின் சிசி மற்றும் பல சிறப்பு அம்சங்களை அதிகரித்து  எப்இசட்- 250 யை அறிமுகம் செய்ய உள்ளது.

அதை எதிர்பார்த்து கொண்டு இருக்கும். சமயத்தில் இந்த நிறுவனத்தின் மேலாளர் வருகின்ற 24-ம் தேதி சந்தைக்கு வர உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வாகனத்தின் என்ஜின் 250 சிசி – யில் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதிலிருந்து வெளிப்படும் குதிரைதிறனின் சக்தி ஆனது 20.5 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்இசட் 250 வாகனமானது மிகவும் ஸ்டைலான தோற்றம் மற்றும் டிசைன், தனித்தனி இருக்கைகள், டிஜிட்டல் மீட்டர் கொண்டுள்ளது.

ஏர் பிரேக்கிங் வசதி கொண்டுள்ளது. நான்கு அல்லது ஐந்து கியர் பாக்ஸினை பெற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment