உங்கள் காரில் அகலமான டயர் இருக்கிறதா அப்போ இதை படிங்க

கார் வாங்கி அதில் சில அதிகப்படியான வேலைகளை செய்வது ஒரு இயல்பான விஷயம். இதில் முக்கியமாக கூறினால் அகலமான டயர் பொருத்துவது தான். அவ்வாறு பொறுத்துவதால் ஏற்படும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. அதை இப்போது பார்க்கலாம்.

நன்மைகள்:-

• காரை ஒரு கம்பீரமானதாகவும் மற்றும் முரட்டுத்தனமானதாக காட்டும்.
• சாலைக்கும், தரைக்கும் இடையே கிரிப்பாக செயல்பட்டு பிரேக் பிடிப்பதால் ஏற்படும் நழுவாமல் இருக்க உதவுகிறது.

தீமைகள்:-

• டயரின் எடை அதிகமானதாக இருப்பதால் காரை நகர்த்த கூடுதல் சுமை ஏற்படுவதோடு மைலேஜ் திறனை குறைக்கிறது.
• காரின் சஸ்பென்ஷன் குறைகிறது. இதனால் பள்ளம், மேடுகளில் செல்லும் போது சொகுசான உணர்வு ஏற்படாது.
• காரை திருப்புவதற்கு சற்று சிரமமாக இருக்கும்.
• டயர்கள் சீக்கிரமே தேய்ந்து போக வாய்ப்பு உள்ளது.
• வேகம் காட்டும் கருவி துல்லியமான வேகத்தை காட்டாது.
• சக்கரத்தில் உள்ள ரிம்கள் சீக்கிரமே மாற்ற வேண்டிய சூழ்நிலை வரும்.
• வெகு தூரம் செல்லும் போது டயர் காருக்குள் சத்தத்தை ஏற்படுத்தும். இதனால் எரிச்சல் உண்டாகிறது.
காரில் அகலமான டயர்களை பொருத்துவதால் நன்மையைவிட தீமையே அதிகம் ஏற்படுகிறது. அதனால் சற்று யோசித்து செயல்படுவது நல்லது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment