நரை முடி இருக்கிறதா அப்போ இதையெல்லாம் செய்யாதிங்க!!

இன்றைய காலத்தில் இளமையிலே நரை முடி வந்து விடுகிறது. மன அழுத்தம் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, டயட் முறை போன்றவற்றாலும் நரைமுடி ஏற்படுகிறது. நரைத்த முடியை பிடுங்கினால் அதிகமாகும் என்ற கருத்து அனைவரிடமும் உள்ளது. ஆனால், இது தவறு. பிடுங்கிய இடத்தில் மீண்டும் நரைமுடி தான் உருவாகும்.

முடி நரைத்தால் செய்ய வேண்டியவை:-

சில நேரங்களில் முடி நரைப்பதற்கு காரணம் உடலில் ஜிங்க், இரும்புசத்து குறைபாட்டினால் கூட இருக்கலாம். எனவே இரும்பு சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
நரை முடி வர ஆரம்பித்தால் புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதை கைவிட வேண்டும்.

செய்யக்கூடாதவை:-

தினமும் தலைக்கு குளிப்பதால் தலையில் உள்ள எண்ணெய் பசை வெளியேறி முடி வெடிக்க ஆரம்பிக்கும். எனவே, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு குளித்தால் போதுமானது.
நரைமுடியை கருமையாக்க பயன்படுத்தும் அம்மோனியா ஹேர் டை தற்காலிகமாக தீர்வை தந்து முடி உதிர்வதை அதிகமாக்குகிறது.
தலைக்கு ஷாம்பூ தேய்த்து குளித்தால் எலுமிச்சை சாறை வெதுவெதுப்பான நீரில் கலந்து தலைமுடியை அலசினால் மெலனின் எனப்படும் நிறமியை அதிகரித்து நரைமுடி வளர்வதை குறைக்கும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment