உடல் பருமனால் ஏற்படும் புற்றுநோய் பற்றி தெரியுமா?

ஒருவருக்கு உடல் பருமன் அதிகமாகி விட்டால் அது பல்வேறு வகையான மரபுக் கோளாறுகளை ஏற்படுத்தி சில இடையூறுகளை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. உடல் பருமன் அதிகமானால் முதலில் இதய நோய் ஆரம்பிக்கும் இது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது. மேலும் தற்போது ஒரு ஆராய்ச்சியில் உடல் எடை அதிகமானவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் பருமனால் பாதித்தவர்களை பாதிக்கும் புற்று நோய் பற்றி இப்போது பார்க்கலாம்.

உடல் பருமனால் ஏற்படும் புற்றுநோய்:-

  • வயிற்று புற்று நோய்க்கும் உடல் பருமனுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதிகப்படியான கொழுப்புகள் உடலில் படிவதால் அவற்றை எரிக்க முடியாமல் உணவுக் குழாய் பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் புற்றுநோய் ஏற்படுகிறது.
  • உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் உடல் பருமனானவர்களுக்கு பித்தப்பையில் கற்கள் உருவாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பித்தப்பை புற்று நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • உடல் பருமன் ஏற்பட்டால் கணையத்தில் உள்ள பீட்டா செல்களில் இன்சுலின் சுரப்பது குறையும். இதனால் கணையம் பாதிப்படைந்து புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
  • கொழுப்பு நிறைந்த செல்கள் ஈஸ்ட்ரோஜனை அதிகமாக சுரக்கும் இதனால் கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
  • உடல் பருமனால் தைராய்டு சுரப்பியும் அளவில் பெரிதாகும். தைராய்டு செல்கள் அளவில் பெரிதானால் அவை புற்று நோயை உண்டாக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • உடல் பருமன் ஏற்பட்டால் இரத்தத்தில் அதிக செல்கள் உருவாகி இரத்த புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • மது அருந்தினால் மட்டுமே வரக்கூடிய கல்லீரல் புற்றுநோய் உடல் பருமன் அதிகமானால் வர வாய்ப்புள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.